உரையிலிருந்து மாற்றப்படும் பேச்சுகளை யார் பயன்படுத்துகிறார்கள்?
உரைகளை பேச்சுகளாக மாற்றுவது நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி புத்திசாலித்தனமானது கூட. உரையை குரலாக மாற்றும் கருவி அனைத்து தரப்பு மக்களுக்கும் பலவகையான பலன்களை வழங்கும். மாணவர்கள், பரபரப்பான தொழில் வல்லுநர்கள், எழுத்தாளர்கள், பார்வைக் குறைபாடுள்ளவர்கள் அல்லது புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளும்போது கண்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்பும் எவருக்கும் இது உதவும்.
வயது முதிர்ந்த வாசகர்கள் அல்லது பார்வைக் குறைபாடுள்ளவர்கள் தங்களால் வாசிக்க முடியாத உரைகளை கேட்டு ரசிக்க உரையிலிருந்து குரலாக மாற்றும் கருவியைப் பயன்படுத்தலாம். எங்கள் மென்பொருள் உள்ளுணர்வு சார்ந்தது மேலும் அனைத்து வகையான உரைகளுக்கும் பயன்படுத்தக் கூடியது என்பதால், உங்கள் உரையை விரைவாக சத்தமாக வாசிக்கலாம் அல்லது எந்த எழுதப்பட்ட உரையையும் ஆடியோ கோப்புகளாக மாற்றலாம்.
வாசிப்பது என்பது நிலையாக ஒரு இடத்திலிருந்து செய்வது, ஆனால் கேட்பது பயணத்தின்போது கூட நிகழலாம், அதே நேரத்தில் வேறு சில பணிகளையும் நீங்கள் செய்யலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் இன்பாக்ஸில் எத்தனை முறை மின்னஞ்சல்கள் குவிந்து இருந்திருக்கின்றன, ஆனால் அவற்றைப் படிக்க உங்களுக்கு நேரமிருந்திருக்காது? இப்போது, நீங்கள் பல்வேறு உரைகளை mp3 கோப்புகளாக மாற்றி, வாகனம் ஓட்டும்போது, உடற்பயிற்சி செய்யும் போது அல்லது வேறு பணிகளைச் செய்யும்போது கேட்கலாம்.
அல்லது நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் உரையை உரக்கக் கேட்பதன் மூலம் அதில் நீங்கள் என்னென்ன திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். உங்கள் கண்கள் பார்க்கத் தவறிய பிழைகள் உங்கள் காதுகளுக்குத் தெரியும், மேலும் உங்கள் உரையின் கட்டமைப்பை கெடுக்கும் குறைபாடுகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம்.
உரையைக் குரலாக மாற்றுவது மிகத் துல்லியமாக இருப்பதால், தங்கள் உச்சரிப்பு அல்லது உரையின் புரிதலை மேம்படுத்த விரும்பும் இரண்டாம் மொழி மாணவர்களுக்கு இது ஒரு ஆக்கப்பூர்வமான வழியாகும். அவர்கள் கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ளவும், பேசுவதில் மிகவும் சரளமாக இருக்கவும் அந்த உரையின் வேகத்தை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
டிஸ்லெக்ஸியா போன்ற கற்றல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு எங்கள் உரையை குரலாக மாற்றும் கருவி மிகவும் உதவிகரமான தீர்வாகும். உரைகளைப் படிப்பதை விட அவற்றைக் கேட்பது மன அழுத்தத்தைக் குறைக்கிறது, இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி தகவல்களை அணுக அனைவருக்கும் உதவுகிறது.
இணையம் அனைவருக்கான இடமாக இருக்க வேண்டும், மேலும் வயது, கல்வி அல்லது சவால்கள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைவரும் அணுகுவதற்கு உரையை குரலாக மாற்றும் கருவிகள் உதவும்.